வெள்ளை நஞ்சு!
- சிவசத்தியா, காரைக்குடி
மாந்தனை இன்று
உருப்படியில்லாமல்
ஆக்கிப்போடுவன
இரு வெள்ளை
நஞ்சுகள்
ஒன்று உப்பு
இரண்டாவது
வெள்ளைச்
சர்க்கரை
பொதுவாக
உலக அறிஞர்கள்
ஒப்புக் கொண்ட
விவரம்
இது ஒரு
ஊட்டத் திருடன் என்பதே
உள்வாங்கிக்
கொள்ள இயலாத
மூலக்கூறு வடிவத்தைக் கொண்டு
எரிச்சலூட்டி
தானும் செரிமான
மாகாமல்
மற்ற உணவுப்
பொருட்களையும்
செரிக்க விடாமல்
உடலைக்கெடுப்பது
உப்பே மும் மலங்களைத்
தோற்றுவிக்கிறது
உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்து
வீணே அண்டை
அயலாருடன்
மோதச் செய்கிறது
உணர்ச்சிகளே
பெரும்பாலும்
உந்தும்
உப்பிலுள்ள கைப்புச் சுவையே
நஞ்சு
கைப்பை நீக்க
உண்பவர் உடல்
ஞாயிறைப் போல
ஒளி வீசும்
நம் உடலையும் நலத்தையும்
மெல்ல மெல்ல அழிக்கும்
நஞ்சுக் கருவியாக
கொலைகாரனாக
உப்பு விளங்குகிறது
ஆவலூட்டி களை உணவில் சேர்ப்பதால்
சாப்பிடும் ஆவல்
அடங்கி
திகட்டி விடும்
மாந்தர்க்கு எதிரியாம்
கைப்பு சுவை
உவர்பியம்
காலனாக
விளங்கும்
நீராலல்லவோ இந்த உலகமே அழிவு
கடற்கோள்களை
ஆழிப்பேரலைகளை
உண்டாக்குகிறது
பிரிவுத்துயர்
துன்பம்
காம உணர்ச்சிகள்
உண்டாக்குது
இயல்பான
இல்லாள் மீதான
மன நிலை யல்லவே
முரணான
காமக் கிளர்ச்சிகளே
கொடூரமான
முரணான
தகாத மனநிலை
களையும்
நடைமுறையில்
அளித்து
உணர்ச்சி யுள்ளவர்களாக்கி...
உணர்வற்ற
வாழ்வுக்கு வழியமைக்கிறது
அன்றாடம்
உண்ணும்
உணவுப் பொருட்களில்
போட்டுப்போட்டு
நம் வாழ்வுக்கு
நாமே உலை வைத்துக்
கொள்ளும்
மலிவான
பொருளாகி
விட்டது
மக்கள் குமுகாய
வாழ்க்கையில்
தம்மை தமிழர்
என உணர்ந்தறிய
முடியா நிலைக்கு
தள்ளியதிலும்
உணர்வு (சுரணை)
இழந்து
வந்தேறிகளிடம்
தம் நாட்டையே
இழக்கும்
இழிநிலைக்கு
ஆக்கியதும்
மகாணம்
பொருந்திய
உப்பே
உப்பு தான்
உன்னை கொள்ள வந்துள்ள கொலைகாரன்
என்கிறார்
சித்தர் பேரறிவு
சுடலைக் காட்டில் பிணம் சுடுபவர்
அல்லர்
நம்மில் உள்ள
அறியாமையை
இடுகாட்டில்
பொசுக்கச் செய்யும்
பேரறிவு
ஞான வெட்டியான்
உப்பை ஏற்காத
சுரக்காயை
மதித்து
வணங்குவோம்.