பெண்!
Nov 02, 2026,01:58 PM IST
-கவிஞர் சிவசத்தியா, காரைக்குடி
மனிதம்
நிறைத்த
பனிக்குடம்
மண்ணில்
விதைத்த மணிமகுடம்
பெண்மையே தாய்மையின் உன்னதம்
வன்மையை வதைக்கும் வல்லினம்
தன்மையாய் காத்திடும்
தன்னினம்
உண்மையாய் உயர்த்திடும்
மனித
உயிரினம்
எப்பொருள் யார் வாய்க்கேட்பினும்
மெய்ப்பொருள் அவளென அறிந்திடும்
சிங்கம் புலி பெண்ணல்ல
சீறிப்பாயும் பாம்பல்ல
பெண்ணெனப் பிறந்திட்ட பெருமைமிகு பேரழகே
பண்பாட்டுப் பெட்டகமே பகுத்தறிவு
நூலகமே
பாங்குடனே கையாண்டால்
பண்பாய் தான் பணிந்திடுவாள்
சிந்தையைச் சிதைத்திட்டால் சீற்றம் கொண்ட புயலாவாள்
மந்தை
ஆடுகளல்ல
மாது
மனிதம்
வணங்கும்
மாமதியே வாழ்க்கைச்
சாரதியே
இறைவன்
நிறைத்த
பனிக்குடம் மண்ணில்
பெண்ணெனும்
புனிதம்
பெருமைமிகுப் பேரினம்