சோதனையை சாதனையாக்கு!

Su.tha Arivalagan
Nov 09, 2026,12:10 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


கருவில் தொடங்கிய

உயி(ய) ர் பிறப்பு


காலமுழுவதும்

உயிருடல் பறப்பு


கரு உரு சோதனை 

ஏற்பு


அறிவியல் மனிதகுல

சாதனை படைப்பு


இன்னல் கழிப்பு

நிம்மதி இறுமாப்பு




சோதனை சாதனை

வாழ்வின் உயிர்ப்பு


சகதியில் மூழ்கும்

இழி  நிலைப்பு


போதை மதி மயக்கும்

வாழ்விழப்பு


சாதலே மனிதனின்

சூழ்ச்சி சாதிப்பு


குடிமாந்தர் வாழ்விலில்லை

தித்திப்பு 


வலியில் விழியில் 

வழிந்தோடும் நீர்கரிப்பு


நித்தமும் கலங்கி

ஏங்கித்  தவிப்பு 


வாழ்ந்திடுமா? " நம்

ஏழை குடிபிறப்பு


தவமிருந்து தாங்கிப்

பெற்ற சோதனைக்கருவும்


சாதனைப் படைத்திடுமா?" 

சோகமே  நிலைத்திடுமா?"


வாழுங்காலம் கொஞ்சமே

வஞ்சனைதான் மிஞ்சுதே


அறிவிழந்த மாந்தன்

வாழ்வில்  வறுமையே


தஞ்சமே சோதனையும்

விஞ்சுமோ?" சாதனைதானாகுமோ? 


இயற்கை அன்னை

படைத்த செல்வம்


இருப்போர்க்கு மட்டுமோ? 

புவியரசி சீற்றமெடுப்பின்


வளமை காணாமல்

அழியுமே  இனமே


இல்லாதார் சோதனை

இருப்பவர்க்குச் சாதனை


சோதனையை சாதனையாக்கு

வேதனை போக்கு


சொக்கபூமியை காத்து

ஓர்குடையின் கீழ் நிறுத்து


உறங்கியுன்னைச் சோதனை

செய்தது போதும்


விழி(ளி) ப்பை உனது 

சாதனையாக்கு


உன்விழிப்பு சந்ததிக்கு

உயிர்ப்பு


ஒளியேற்றப் பழக்கு

வாழ்விலில்லை வழக்கு.