தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபைக்கு ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி மொத்தம் 18 இடங்களில் போட்டியிடுகிறது. ஏற்கனவே 3 வேட்பாளர்களை அறிவித்திருந்த பாமக, மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி பெயர் இடம் பெற்றுள்ளது. செளமியா ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் போட்டியிட்டுள்ளார். தற்போது முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில் அவர் குதித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:
தருமபுரி - முனைவர் சௌமியா அன்புமணி
பெரம்பூர்- கவிஞர் ம. திலகபாமா
திருப்போரூர் -வழக்கறிஞர் கே. பாலு
விருத்தாசலம் -மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்
சேலம் வடக்கு - எஸ். சதாசிவம்
விக்கிரவாண்டி - சி. சிவக்குமார்
காட்டுமன்னார்கோயில் (தனி) - மருத்துவர் அன்பு. சோழன்
சேலம் மேற்கு - மு. கார்த்தி (முன்னாள் எம்.எல்.ஏ)
பென்னாகரம் - பாடி வெ. செல்வம்
போளூர் - சி.ஆர். பாஸ்கரன்
ஜெயங்கொண்டம் - க. வைத்தி
சோளிங்கர் - வழக்கறிஞர் க. சரவணன்
மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ. பழனிச்சாமி
உத்திரமேரூர் - பெ. மகேஷ்குமார்
ரிஷிவந்தியம் - அ.ப. செழியன்
கூட்டணியில் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.