கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8 நாட்கள் முன்கூட்டியே துவங்கியதாகந அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். இந்த பருவ மழை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும். தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.ஆனால் இந்த வருடம் தமிழகத்தில் அதிக மழை கிடைத்துள்ளது.
அதாவது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 10 நாட்கள் முன்கூட்டியே மே 25 ஆம் தேதி வாக்கில் தொடங்கப்படும். அதேபோல் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, மே 27 ஆம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கும். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிகப்படியான மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே காற்று சுழற்சி காரணமாக, கோடை மழை கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 19 வரை தமிழ்நாட்டில் 192.7 மிமீ மழை பெய்துள்ளது. இது கோடை காலத்தில் பெய்யும் சராசரி மழையான 101.4 மிமீ மழையை விட கிட்டத்தட்ட 90% அதிகமாகும். அதே நேரத்தில் அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க கூடும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவில் தொடங்கி நாடு முழுவதும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவ கூடும் நாட்டின் 80 சதவிகித மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் வெயில் சற்று தணிந்து சிலு சிலு என்ற காற்றுடன் குளுமையான சூழலில் நிலவு வருகிறது.