என்னோட முதல் புத்தகம் வெளியிட நான் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா!

Su.tha Arivalagan
Aug 17, 2026,04:55 PM IST

- ச.ப. அம்புஜா


நான் ச. ப. அம்புஜா. எனது முதல் புத்தகத்தை வெளியிடுவதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு நாள் என் தந்தை, “இதற்கு எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டார். அதற்கு நான், “அப்பா, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவாகும்,” என்று கூறினேன். சிறிது நேரம் கழித்து என் அம்மாவும் அதே கேள்வியைக் கேட்டார். அவரிடமும் நான் அதே பதிலைக் கூறினேன்.


என் அம்மா தனது தாயாரிடமும் மற்றும் பலரிடமும் இதைப் பற்றி கூறினார். அதன் பிறகு நான் என் புத்தகப் பணிகளைத் தொடங்கினேன். இறுதியாக, என் புத்தகம் வெளியிடப்படும் நாள் வந்தது. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றேன். புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. அங்கு நான் என் புத்தகத்தை வெற்றிகரமாக வெளியிட்டேன்.


அதன் பிறகு, சில காரணங்களால் என் தந்தையால் எங்களுடன் வர முடியவில்லை. எனவே, நானும் என் தாயும் என் தாத்தாவும் சென்றோம். என்னுடைய தோழியும் அவளுடைய தந்தையும் எங்களுடன் வந்தனர். பின்னர் நாங்கள் திருச்சி பறவைகள் சரணாலயத்திற்குச் சென்றோம். அங்கு அழகான சிறிய மற்றும் பெரிய பறவைகளைப் பார்த்தோம். நான் அவற்றிற்கு உணவு கொடுத்தேன். அவை என்னுடன் விளையாடியது போல எனக்குத் தோன்றியது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.




பறவைகளுடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்ததால், நேரம் சென்றதே தெரியவில்லை. திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தபோது, மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. ஆனால் எங்களுடைய தொடர்வண்டி (Train) மாலை ஆறு மணிக்குப் புறப்பட இருந்தது. எனவே, நாங்கள் விரைவாகப் பேருந்து (Bus) பிடித்து நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் பேருந்து வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு பேருந்து வந்தது. நாங்கள் அனைவரும் விரைவாக அதில் ஏறி தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றோம். அதிர்ஷ்டவசமாக, சரியான நேரத்தில் தொடர்வண்டியைப் பிடித்து வீட்டிற்குத் திரும்பினோம்.


அந்த நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. நீங்களும் எங்கு சென்றாலும் பத்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் சென்று வாருங்கள்.


(எஸ்.பி. அம்புஜா, 8ம் வகுப்பு, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)