எழுத்தும் ஓட்டுமாக.. அதிகாரம் மக்கள் கையில் வந்த நாள்!

Su.tha Arivalagan
Jan 26, 2026,04:09 PM IST

- வே.ஜெயந்தி


மக்களாட்சி மலர்ந்தது,

அடிமைச் சங்கிலி

அறுந்து விழுந்தது

இப்பொன்னாள்.


சட்டமே அரசாய் நின்றது,

சமத்துவம்

சாதியைக் கடந்தது

இந்நாள்.


உரிமை குரலாய் எழுந்தது,

உழைப்பின் மதிப்பு

உயர்ந்தது

இந்த நாள்.




எழுத்தும் ஓட்டுமாக

அதிகாரம்

மக்கள் கையில்

வந்த நாள்.


பெண்ணும் ஆணுமாய்

பேதமின்றி

வாய்ப்பு சமமாய்

பிறந்த நாள்.


மொழி, இனம், மதம்

தாண்டி

ஒரே தேசம்

என்ற உணர்வு

வளர்ந்த நாள்.


வறியவன் கனவும்

வல்லவன் கனவும்

ஒரே சட்டத்தின்

நிழலில்

பாதுகாப்பு பெற்ற நாள்.


கொடி மட்டும் அல்ல,

கனவுகளும்

உச்சியில் பறந்தது

இந்த நாள்.


வரலாறு சொன்ன

வலி நிறைந்த

பாதையை

வெற்றி நடை

ஆக்கிய நாள்.


தலைமுறை தோறும்

தர்மமும் நீதியும்

காக்கப்பட வேண்டும்

என்ற பொறுப்பின் நாள் 

குடியரசு நாள்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)