டான்ஸ், ஓவியம்.. திருவள்ளுவர் வேடம் தாங்கி.. திருக்குறள் சொல்லி.. அசத்திய சிறப்புக் குழந்தைகள்!

Su.tha Arivalagan
Oct 08, 2025,04:55 PM IST

- ரேவதி அம்பிகா


சிறப்பு குழந்தைகள் என்றால் மாற்றத்தை உருவாக்கக்கூடிய குழந்தைகள் என்றே கூறலாம். அவர்கள் இன்றைய சமுதாயத்தில் கண்டிப்பாக அனைவராலும் அறியப்படக்கூடிய குழந்தைகள். அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஏதோ ஒன்றை சொல்வதற்காக வந்திருக்கிறார்கள். மனித நேயத்தையும் பண்பையும் பொறுமையையும் உண்மையையும், பாசத்தையும் அன்பையும் இந்த குழந்தைகளிடம் மட்டும் தான் கற்றுக் கொள்ள முடியும்.


இந்த உலகத்தில் பிறந்திருக்கும் அவர்களுக்கு நாம் நல்லதொரு வழியை காட்ட வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை, தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச்சங்கம் நிறுவனர் திவ்யா ஸ்ரீ மற்றும் கமலேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் ரத்னா செந்தில் குமார் ஆகியோர் இணைந்து ஒரு முன்னெடுப்பை நடத்தினர்.





இவர்களது முயற்சியால், சிறப்பு குழந்தைகளுக்கு என்று தனி குழு அமைத்து அந்த குழுவில் 240 குழந்தைகளுக்கு மேல் இணைந்துள்ளார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நிகழ்வு வைத்து மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களை திறமைகளை வெளியே கொண்டு வர நிகழ்ச்சிகள் வைத்து சான்றிதழ் இணைய வழியில் தந்து அவர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


குழந்தைகளுக்கு மாறுவேடம், பாட்டு பாடுதல், நடனமாடுதல், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் அவர்களின் பன்முக திறமையை காட்டும் பலவித செயல்பாடுகள் செய்யப்பட்டு வந்து கொண்டிருந்தது. இவை அனைத்தும் இணைய வழியில் மட்டுமே நடைபெற்றது.




இதைத் தொடர்ந்து குழந்தைகளை சந்திக்கும் விதமாக நேரடி நிகழ்வு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கம் மற்றும் மனிதம் விதைப்போம் பன்னாட்டு மையம் ஜோதி மீனாட்சி அம்மா சிறப்பாக இணைந்து குழந்தைகளுக்கு திருக்குறள் நிகழ்வு நடத்தப்பட்டது.  4.10. 2025 அன்று சிறப்பு குழந்தைகளின் திருக்குறள் நிகழ்வு நடைபெற்றது.


குழந்தைகளுக்கு திருக்குறள் நிகழ்வு சென்ற மாதம் இரண்டு முறை ஜூம் இணைப்பில் நடத்தப்பட்டது. இரண்டு கட்ட நிகழ்வுகளில் மொத்தம் 133 குழந்தைகள் திருவள்ளுவர் திருஉருவ  படத்திற்கு வண்ணம் தீட்டியும், திருவள்ளுவரின் படத்தை வரைந்தும், திருவள்ளுவர் போல் மாறுவேடம் அணிந்தும், திருக்குறளை 5, 10, 20,50,150 என்று அவர்களுக்கு தெரிந்தவரை மனனம் செய்தும் கூறினார்கள்.




சிலர் பெற்றோர்களின் உதவியுடனும் திருக்குறளை சிறப்பாக கூறினார்கள். திருக்குறள் அதிகாரத்தை ஒப்பிட்டு கதைகள் கூறினார்கள். திருவள்ளுவரைப் பற்றி சிறப்பாக பேசினார்கள்.


காலை 10:30 மணி முதல் மதியம்  1 மணி வரை என்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் அனைவரும் 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். 11 மணியிலிருந்து 11. 45 மணி வரை குழந்தைகள் அனைவருக்கும் திருவள்ளுவர் படம் கொடுக்கப்பட்டது. திருவள்ளுவர் படத்திற்கு 30 குழந்தைகள் வண்ணம் தீட்டினார்கள். பின்னர் தேநீர், பிஸ்கட் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறகு நிகழ்வு 12.15 மணிக்கு ஆரம்பமானது 12.15 லிருந்து 1.45 வரை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது 


மொத்தம் 40 குழந்தைகள் கலந்து கொண்டனர். 30 குழந்தைகள் ஓவியம் வரைந்தும் 3 குழந்தைகள் நடனமாடியும் 10 குழந்தைகள் திருக்குறள் கூறியும் நிகழ்வினை சிறப்பாக சிறப்பித்து தந்தனர். தடம் பதிக்கும் தளர்கள் அமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரேவதி அம்பிகாவும் ஒருங்கிணைப்பாளர்களாக தயாளு மற்றும் மஞ்சுளா ஆகியோர் இணைந்து  நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது 



குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழும் திருக்குறள் புத்தகமும் பிஸ்கட் பாக்கெட்டும் பரிசாக வழங்கப்பட்டது. மத்திய நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வந்திருந்த சிறப்பு குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் 


நிகழ்வின் தலைமையாக உலக திருக்குறள் மையம் நிறுவனர் முனைவர் திருக்குறள் தூயர் கலைஞர் விருதாளர் மோகனராசு அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிறப்பு உரை வழங்கினார். சிறப்பு குழந்தைகளை பற்றி தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும் நலத்திட்ட உதவிகள் கொண்டு வருவதாகவும் உரையாற்றினார். சான்றிதழும் பரிசம்  தந்து வாழ்த்தினார். மேலும் பாரதி கலைக்கழகம் ஞானபீட விருதாளர் குமரி செழியன் ஐயா மாணவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வாழ்த்தி சான்றிதழ் வழங்கினார்




ஒருங்கிணைப்பாளர்கள் ரேவதி அம்பிகா, தயாளு, மஞ்சுளா மூவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். தயாளு நன்றியுரை வழங்கினார்கள். இறுதியாக சிறப்பு குழந்தை ஆரோன் ஜெய்சன் என்ற மாணவன் நாட்டு பண் வழங்க நிகழ்வு சிறப்பாக முடிவடைந்தது. சொ. பத்மநாபன் ஐயா, மதியழகன் ஐயா சுபத்ரா தேவி அம்மா, ஆரோக்கிய மேரி அம்மா குழந்தைகளை வாழ்த்தி பரிசு தந்தனர்


சிறப்பு குழந்தைகள் இறைவன் தந்த குழந்தைகள், அவர்களை பாதுகாப்போம். சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கு கை கொடுப்போம்.