தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி... முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட அளவிலான தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் மாணவி மா.ரித்திகா சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்த மாணவிக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி ரூபாய் 10,000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார். சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். வெற்ற பெற்ற மாணவி ரித்திகா மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஸ்ரீதர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். மாணவ மாணவியர்களும் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.