விடைபெற்றார் தியாகச் சீலர் நல்லகண்ணு: 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (பிப்ரவரி 25, 2026) காலமானார். அவரது மறைவு தமிழக அரசியலில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25 நேற்று மதியம் 1:55 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமையகமான 'பாலன் இல்லத்தில்' பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு முக்கிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, நல்லகண்ணு உடல் மீது மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம் என முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
தியாகராயர் நகரில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு இறுதிஊர்வலமாக நல்லகண்ணு உடல் எடுத்து செல்லப்பட்டு, அவரது விருப்பப்படியே, உடல் தானம் செய்வதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுகு்காக அவரது உடல் ஒப்படைக்கப்படுகிறது.