புன்னை மரம்!
Jan 28, 2026,03:26 PM IST
- கவிஞர் சு. நாகராஜன்
புன்னை மரமே உன்னை எங்கே தேடுவேன்
களிமண் நிலத்திலும்
உப்பு தண்ணீரிலும்
செழிப்பாய் வளர்ந்திடுவாய்
என்று_ அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது
இலையைப் பார்த்தேன்
பளபளப்பாக மின்னிடுவாய்
கனியைப் பார்த்தேன்
கடினமான ஓட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்கிறாய்
உன்னைப் பற்றிய பாடல்கள் இலக்கியங்களில் இருக்கிறது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
நீ வந்து விட்டாய் என்பது அப்பாடலால் புரிகிறது
உன்னைப்பிழிந்தால்
எண்ணை தந்திடுவாய்
உன்னை வளர்த்தால்
நோயை விரட்டிடுவாய்
உந்தன் பூவும் மருந்தாகுமே
உந்தன் விதையும் குணமாக்குமே
ஆஹா!புன்னை மரமே நீ எங்களது வீட்டிற்கு வரமே!
உன்னைத் தேடி ஓடுகிறேன்
எந்தன் கண்ணில் படவில்லை ஓ மரமே!
உன்னை தொலைத்தது என் தவறு
உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்
(கவிஞர் சு.நாகராஜன், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)