சென்னை பீச் டூ தாம்பரம் இடையே ..ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே!
சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை மறுநாள்(9.3.2025)ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பீச் டூ எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள நாலாவது வழித்தடத்தில் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமமை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் செல்லும் புறநகர் மின்சார ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை பீச் டூ தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
கூடுதலாக பயணிகளின் வசதிக்காக தாம்பரம் டூ கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவேளையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் நாளை மறுநாள் செங்கல்பட்டு- காஞ்சிபுரம்-
திருமால்புரம்- அரக்கோணம் இடையேயான புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணிக்கு பிறகு புறநகர் ரயில் சேவை அட்டவணைப்படி மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.