வெற்றியும் தோல்வியும்
- க .யாஸ்மின் சிராஜீதீன்
இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும்
நிச்சயமாக வரலாறு படைக்கும்...
வெற்றியின் வரலாறு ஊக்கம் தரும்
தோல்வியின் வரலாறு
வெற்றிக்கான வழிகளைக்காட்டும்..
தோல்வி தரும் வெற்றிக்கு முகவரி
வெற்றி சொல்லும் தோல்வி என் படிக்கட்டு என்று....
இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனம் சாதனைபடைக்கும்...
படபடக்கும் மனம் படி ஒன்றுகூட ஏறாது....
வெற்றி தோல்வி சகஜம்தான்
கண்டிப்பாக இரண்டில் ஒன்று கிடைத்தே தீரும்தான் ....
முயற்சியும் காலமும் கைகோர்த்திடும்
தோல்வியையும் வெற்றி ஆக்கிடும்...
தோல்வியை சந்திக்காதவர்கள் இல்லை
வெற்றியை அடையாமலும் இல்லை...
தோல்வி தரும் பாடங்கள் நம்மை பண்படுத்தும்...
வெற்றியை நோக்கிய நம்
வீரநடைக்கு உருவளிக்கும்.....
வெற்றி தோல்வி கலந்துதான் வாழ்க்கை..
வாழ்வோம் நமக்காக வீழ்ச்சிகளை படியாக்கி,
புகழ்ச்சிகளை ஊக்கமாக்கி,
ஏளனங்களை ஏணியாக்கி
சிகரம் தொடுவோம் சிறகுமுளைத்த பருந்தாய்....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)