Tamil Haiku: அடைமழை ஆதவனுக்கும் குளிர்!

Su.tha Arivalagan
Oct 01, 2026,10:27 AM IST

- சுதா திருநாராயணன்


எழுத்தாளர் சுதா திருநாராயணன் எழுதிய சில ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு.


1. பெருமழை


நாற்காலிகளுக்கு

ஈரப் பொன்னாடை.


2. நாணம் 

முதல் பனிமகள் 

கதிரவனைக் கண்டு வெட்கி மறைந்தாள் 


3. சோகம்


வான மேடைப்போட்டி

கர்ஜித்தது இடி 

தோற்றது மேகம்

பொழிந்தது கண்ணீர் மழை. 


4. பசி


அழகு நிலா

சாப்பிட மறுக்கும்  மகவு,

பசித்தது முழுமதிக்கு!!! 


5 எக்ஸிபிஷன்


விண்மீன்களின் 

கண்காட்சியில் 

அம்புலியின் பவனி. 


6. காணவில்லை




அடைமழை 

ஆதவனுக்கும் குளிர், 

மேகப் போர்வை மறைத்தது 


7. மழலையின் மகிழ்ச்சி 


வீட்டினுள் மாரி வெள்ளம் 

காகிதக் கப்பலில் 

குழந்தையின் குதூகலிப்பு!


8. மழை

 

பொழியும் மழை 

அணைந்துவிட்டன

கோடி நட்சத்திர தீபங்கள்.


9. காதல்


இதயக்கடலின் ஆழம் புரியாமல் 

கண்ணீர் கடலில் மூழ்குகிறேன்.


10: தேர்தல்:


தேர்தல் கட்சிக் கூட்டம்

தொண்டர்களின் 

எதிர்பார்ப்போ பிரியாணி.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)