கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Meenakshi
Apr 15, 2025,02:58 PM IST

சென்னை: கோடை விடுமுறையையொட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ள கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில்,


ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.




 வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2ம் தேதி வரையிலும்


வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1வரையிலும்


ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்


ஞாயிறு அன்று இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்


திங்கள்கிழமை இயக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவை  மே 12 முதல் ஜூன் 2 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.