இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!
- ஸ்வர்ணலட்சுமி
இமயமலைப் பகுதிகளுக்குச் சொந்தமான பிரம்ம கமலம் பூ ஒரு தனித்துவமான மலர்.
உத்தரக்கண்ட் மாநில மலரான பிரம்ம கமலம் இமய மலைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இந்த தாவரம் 3000 முதல் 4800 மீட்டர் வரை உயரத்தில் வளரும்.இது ஒரு ஹெர் மாஃப் ரோடைட் மூலிகையாகும்.இது சுமார் ஐந்து முதல் 10 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். மழைக்காலத்தின் நடுப்பகுதியில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மலைப்பகுதியின் பாறைகள் மற்றும் புற்களுக்கு இடையில் இந்த மலர் பூக்கும்.
முக்கிய அம்சங்கள்:
பிரம்ம கமலத்தின் அறிவியல் பெயர் - சௌசுரியா ஒப் வல்லாட்டா.
பூக்கும் காலம் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை. இதற்கு நன்கு வடிகால் வசதி உள்ள மண் தேவைப்படுகிறது. இந்த தாவரத்திற்கு மறைமுக சூரிய ஒளி இருந்தால் மட்டும் போதும்.
ஆங்கிலத்தில் பிரம்ம கமலம் :
பிரம்ம கமலம் பூ என்பது ஆஸ் டெரேசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இந்த மலர் சௌ சுரியா
ஒப் வல்லாட்டா அல்லது "புனித சௌ சுரியா " என்றும் அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகிறது.
பிரம்ம கமலம்- பிரசாதம் :
உத்தரக்கண்ட் மாவட்டங்களான கேதார்நாத், ஹேம் குண் ட் சாகிப் மற்றும் துங் நாத் ஆகிய இடங்களில் பிரம்ம கமலம் காணப்படுகிறது. இந்தச் செடி இந்தப் பகுதிகளில் மிகவும் விலைமதிப்பற்றது. இது ஒரு ஆன்மீக மலராக கருதப்படுகிறது.
மேலும் பத்ரிநாத் சன்னதியில் பகவான் விஷ்ணு விற்கும், கேதார்நாத் சன்னதியில் சிவபெருமானுக்கும் படைக்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறும் "நந்த அஷ்டமி "திருவிழாவின் போது பிரம்ம கமலம் மலர் கோயில்களில் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சுகாதார நன்மைகள்:
பிரம்ம கமலமலர் ஆக்சிஜனேற்ற நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இம்மலர் அழற்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. சுவாச ஊக்கம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுகிறது.
பிரம்ம கமலம் மலர் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்து மாதமான ஸ்ரவண மாதத்தில்( ஜூலை அல்லது ஆகஸ்ட் ) முழு நிலவு நாளில் விடியற்காலையில் பூக்கும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களில் இது பிரபஞ்சத்தின் படைப்பாளரான பிரம்மாவின் விருப்பமான மலர் என்று கூறப்படுகிறது. இத்தனை புனித தன்மை வாய்ந்த மலர் பிரம்ம கமலம்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.