ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 2026: அன்ன வடிவில் ஈசன் அகிலம் காக்கும் ஈசன்!
- ஸ்வர்ணலட்சுமி
"அன்ன வடிவில் ஈசன் அகிலம் காக்கும் ஈசன்!"
"கோடி சிவலிங்க தரிசன பலன் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!"
பராபவ வருடம் 20 26 அக்டோபர் மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 8 ஆம் நாள் அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பு மிக்க வழிபாடு ஆகும்.
ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம் "
இது காலம் காலமாக நம் பேச்சு வழக்கில் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். இதன் பொருள் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு சாத்தப்படும் அன்னாபிஷேகத்தை கண்டு வழிபாடு செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதாகும் .
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நேரம் :
25.10.2026 ஞாயிறு, ஐப்பசி 8.
பௌர்ணமி திதி துவக்கம் அக்டோபர் 25 காலை 11 :31 மணி முதல் பௌர்ணமி திதி நிறைவு அக்டோபர் 26 காலை
10: 16 மணி வரை.
ஒவ்வொரு கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும் நேரம் மாறுபடுகிறது. சில சிவன் கோவில்களில் காலை நேரத்திலும் சில கோவில்களில் மாலையிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிறப்புகள்:
"உணவே இறைவன்! இறைவனே உணவு! ஓம் நமசிவாய!
" சிவனடி போற்றி செழுமை தரும் அன்னாபிஷேகப் பெருமை போற்றி ".
சிவபெருமானுக்கு வழக்கமாக பால்,தயிர், தேன்,சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு புதியதாக சாதம்வடித்து சூடு ஆறிய பிறகு அந்த சாதத்தை கொண்டு லிங்கத் திருமேனியை முழுவதுமாக அவருடைய நெற்றிக்கண்ணும்,இரு கண்களும் திறந்தவாறு மூடுகிறார்கள். அதற்கு மேல் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
வழிபாடுகள் எவ்வாறு செய்யலாம்?
வீட்டில் அன்னாபிஷேகம் செய்யலாமா? என்ற கேள்வி எழும்.
1.சில வீடுகளில் கோவிலுக்குச் சென்று வழிபட இயலாதவர்கள், விளக்கேற்றி, பச்சரிசி சாதம் வடித்து, தயிர் சாதம் அல்லது நெய் சாதம் நைவேத்தியமாக வைத்து, வில்வ இலைகள் மற்றும் மலர்மாலைகள் சாற்றி, தீப தூப ஆராதனை செய்து வழிபடுவது சிறப்பு.
2. சிலர் வீடுகளில் சிவலிங்க வழிபாடு செய்வது வழக்கம். அவர்கள் சுத்தமான நீர்,பால், தயிர், தேன் போன்றவற்றால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, வடித்து,சூடு ஆறிய பச்சரிசி சாதத்தை சிவபெருமானின் லிங்கத் திருமேனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் செய்வது சிறப்பு.
3. சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி வாங்கிக் கொடுப்பது சிறப்பு.
4. வில்வ இலைகள், நல்லெண்ணெய் அல்லது நெய், சந்தனம்,விபூதி, மலர்கள் வாங்கிச் செல்வது சிறப்பு.
5. பசியால் வாடுபவர்களுக்கு தங்களால் இயன்ற அன்னதானம் செய்வது கோடி புண்ணியம்.
6. சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்ன பிரசாதத்தை கோவிலில் அங்கும் இங்கும் வைக்காமல் பக்தியுடன் உண்பது சிறப்பு.
7. மனதில் கூற வேண்டிய மந்திரம்: 'ஓம் நமசிவாய 'எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவரே இருப்பது சிறப்பு.
"அகிலத்தின் பசி தீர்க்கும் அன்னதான பிரபுவுக்கு அரோகரா!"
"அன்னமே வடிவான அண்ணா மலையானை வணங்கி பசிப்பிணிகள் நீங்கி பல்லாண்டு வாழ்வோமாக!"
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.