வாழ்வியல் தத்துவம்.. வார்த்தைகள் மனிதரைக் கவரும். இரக்கம் ஒன்றே கடவுளைக் கவரும்!

Su.tha Arivalagan
Jul 27, 2026,02:18 PM IST

- டி. கலைமணி

  

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும் முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகில் ஆகச்சிறந்த காதலர்கள். 


தாய் இறந்தால் மொட்டை போடுவது கட்டாயம் என ஆண் பிள்ளைக்கு சொன்ன சமூகம் .. அவர் இருக்கும் போது சோறு போடுவது கட்டாயம் என ஏன் யாரும் சொல்லவில்லை.. 


ஓருவன் உயிர் பிரிந்த பின் அவன் பயன்படுத்திய பாய், தலையணை, துணிமணிகளை எரிக்கும் நாம்.. 


அவனிடம் இருக்கும் பணத்தையோ, அவன் பயன்படுத்திய காரையோ, வீட்டையோ, நகைகளையோ. எரிப்பதில்லையே ஏன்?


பணம் உலகத்தை கவரும், அழகு உள்ளத்தை கவரும். வார்த்தைகள் மனிதரைக் கவரும். இரக்கம் ஒன்றே கடவுளைக்

கவரும்.




அனுபவங்கள் அதிகமானால் அமைதியாகி விடுகிறது மனசு


முகத்தில் புன்னகையும்

மனதில் அன்பும்

இருந்தால் போதும்

வாழ்க்கை

ரொம்ப அழகாக இருக்கும்


அழுகின்ற வினாடியும், 

சிரிக்கின்ற

நிமிடங்களும்.. 

வாழ்க்கை என்ற

காலக் கடிகாரத்தில் நிரந்தரமில்லை. 


(வாழ்க்கை)  நேசிக்க கற்றுதரும், 

(அனுபவம்) யாரை நேசிப்பதென்பதை கற்றுத்தரும்


சூழ்நிலை நம்மை நேசிப்பவர் யாரென தெரிந்து கொள்ள கற்றுத்தரும். 


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)