Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

Su.tha Arivalagan
May 23, 2026,12:52 PM IST

செய்யும் வேலையில் முழு ஈடுபாடு இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் எண்ணத்தின் உயரமே வாழ்க்கையின் உயரம் எண்ணம் உயர்ந்தால் வாழ்வு உயரும், தாழ்ந்தால் வாழ்வு தாழும். 


யாரிடமும் வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள். நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது




வெட்ட வெட்ட நகமும், முடியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்காக யாரும் விரல்களையோ அல்லது. தலைமுடியையோ வெட்டி வீசுவதில்லை. அதுமாதிரிதான் உறவுகளும் நட்புகளும்  பிரச்சனைகளும், முரண்பாடுகளும் வரத்தான் செய்யும் தூக்கி எரிய வேண்டியது காரனமான பிரச்சனைகளை தானே தவிர உறவுகளையும் நட்புகளையும் அல்ல.  


எவரையும் பழிக்கு பழிவாங்க நினைக்க வேண்டாம். உங்களை அவமதித்தவர்கள் உங்கள் கண்முன்னே அதன் பலனை அடைவர் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அவை உங்கள் கண்களுக்கு முன்பு நடக்கும்.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)