புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!
- டி.கலைமணி
பண்பின் சிகரங்களாக பலரை நமக்கு புராணங்களும், வரலாறும் காட்டிச் சென்றுள்ளது. அவர்கள் யார் என்று பார்ப்போமா!
செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது - கர்ணன்.
தர்மத்தை காக்க சாரதியாகவும் - கண்ணன்.
கண்ணனும், இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி பிடிவாதமாக - ஹனுமன்
தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்த்தது ஹனுமன்.
வேடுவனும், விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணாதிருப்பது - இராமன்.
தனது அண்ணணுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது - இலட்சுமணன்.
இந்த பாரதத்தை விட என் பரந்தாமனின் பாதச் சுவடுகளே எனக்கு முக்கியம் - பரதன்
தன் கணவன் காணாததை தானும் காண விரும்பாதது - காந்தாரி
பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் - ஹனுமன்
தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறியவன் - விபீஷணன்.
தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன் கும்பகர்ணன்.
நண்பனின் மனைவியினை அபகரித்து சென்றவனை தாக்கியவன் - ஜடாயூ.
தன் மனைவியை அபகரித்து சென்றவன் தன்னை எதிர்த்து நிராயுதபாணியாக நிற்கும் பொழுது, இன்று போய் நாளை வா என்று கூறியவன் - இராமன்.
தன்னை நூறுமுறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் - கண்ணன்.
பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன் - நரசிம்மன்.
அன்றைய Test Tube baby- துரோணாச்சாரியார் .
அன்றைய incubator -கமண்டலம்.
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் சுக்ராச்சாரியார்.
கருவறையில் போர் அறிவு பெற்றவன் - அபிமன்யூ
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் - கர்ணன்
தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்க்காதவன்- துரியோதனன் .
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி பக்தி, தத்துவம் என பல்சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)