சுவர் இருந்தால் தான் சித்திரம்.. ஆரோக்கியத்திற்கு ..!
- டி.கலைமணி
ஆரோக்கியம் என்பது நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அது உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த ஒரு முழுமையான நல்வாழ்வு நிலையாகும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் - நம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக்க முறையான ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
1. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை!
2. முதுகுத்தண்டு வலிக்கு பப்பாளிப்பழம் சாப்பிடு.
3. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
4. மூளைக்கு வலியூட்ட வல்லாரை !
5. காது மந்தம் போக்கும் தூதுவளை!
6. உடற்சூடு அகல முருங்கைக் கீரை!
7. நீரிழிவு நோய்க்கு துளசி இலை !
8. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூண்டு
9. கண் பார்வை அதிகரிக்க கேரட் ,புதினா, ஏலக்காய்!
10. கடுமையான ஜலதோஷத்திற்கு தேனும், எலுமிச்சையும்.
11. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி !
12. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
13. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
14. இளைத்த உடல் பெருக்க மிளகு!
15. பொடுகை போக்க தயிரில் குளி .
16. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
17. இதய பலவீனம் போக்க மாதுளை!
18. வெள்ளை வேட்டை தீர அன்னாசி !
19. காது வலிதீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில்விடு!
20. பீனிசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
21.பொன்னாங்கணி உண்டால் நோய் தனிந்து, உடல் தேறும்.
22. வாழைத்தண்டு சிறுநீரகக்கற்களை கரைக்கும் .
23. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
24. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
25. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
26. ஜிரண சக்தியை அதிகரிக்கும் மிளகும், இஞ்சியும்!
27. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம், பாதாம்பருப்பு.
28. மருதோண்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
29. நோய் எதிர்ப்பு சக்திக்கு பப்பாளி.
30. இருமலுக்கு துளசி!
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி. பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், தன்னம்பிக்கைக் கதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)