பத்தாண்டு கால பாசப் பயணம்!

Su.tha Arivalagan
Nov 02, 2026,03:38 PM IST
- தி. மீரா, ஈரோடு

பத்தாண்டுப் பயணம் – 02.11.2016 முதல் 02.11.2026 வரை
பத்தாண்டு காலம் பாசத்தின் பயணம்,
பரம்பொருள் அருளால் மலர்ந்திடும் தருணம்!
குருஜி சுவாமிஜி ஆசிகள் துணையாய்,
குறையிலா வாழ்வு குருவருள் நிழலாய்!
அனுபவம் ஆயிரம் அன்பின் நினைவுகள்,
அகத்தில் நிறைந்திடும் ஆனந்தக் கனவுகள்!

கணவர் உழைப்பின் கைவண்ணம் இதுவே,
கடின உழைப்பின் கனிந்திட்ட வடிவே!
ஹரே ராமா ராமா ஹரே எனும் நாமம்,
இதயத்தில் ஒலிக்கும் இனியதோர் கீதம்!
குலதெய்வ மகிமையின் அருள்வழிப் பிறப்பு,
பகவான் நாமத்தின் புனிதத் திருப்பம்!
கந்தசஷ்டி காலத்தில் உருவான இல்லம்,
கந்தனின் அருள்பொழி தெய்வீகத் தலம்!





குருகிருபை என்றாலே அருளின் அடையாளம்,
கூடி வாழ்ந்திடும் ஆன்மிக ஆலயம்!
கட்டிடம் மட்டுமல்ல கனவுகளின் சின்னம்,
காலங்கள் கடந்தும் காக்கின்ற பொக்கிஷம்!
எங்கள் இரண்டாம் குழந்தை என்றே போற்றுவோம்,
இனிய நினைவுகளை இதயத்தில் சேர்ப்போம்!
பத்தாண்டு நிறைவில் பணிவுடன் வணங்குவோம்,
பரமனின் பாதத்தில் நன்றியைச் செலுத்துவோம்!

குருவருள் என்றும் குடிகொண்டிருக்கட்டும்,
குருகிருபை இல்லம் புகழுடன் சிறக்கட்டும்!
இனிய பத்தாம் ஆண்டு நிறைவு நல்வாழ்த்துகள்!