நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!

Su.tha Arivalagan
Sep 29, 2026,11:18 AM IST

- தி. மீரா, ஈரோடு


திருச்சி இந்திராகணேசன் கலை அறிவியல் கல்லூரியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா கவியரங்கம் பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் மற்றும் பாவேந்தர் பைந்தமிழ் மன்றம் லைன்ஸ் கிளப் நடத்திய மாபெரும் கவியரங்கம் மிக அழகாக அரங்கேறியது.


கவியரங்கத்தின் தலைப்பு நான் நிரந்தரமானவன்.




அதற்கேற்ப நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் புதுக்கவிதை மரபுக் கவிதை எழுதிச் சிறப்பித்தார்கள். 97 கவிஞர்கள் அரங்கேற்றம் செய்தார்கள்.


அதில் நானும் ( தி.மீரா, ஈரோடு) மரபுப் பா அரங்கேற்றம் செய்தேன். மரபுக் கவிநிலா விருது பெற்றேன். கவியரங்கத் தலைமையாக இருந்து சிறப்பான பின்னூட்டம் கொடுத்தேன். ஒருங்கிணைப்பாளருக்கான விருது  விருத்தப்பாவில் முதல்நிலை பெற்றதற்கான விருதுச் சான்றிதழ் மின்னூல் வெளியீடு அனைத்தும் மிக அழகாக அரங்கேறியது.




அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. பாரதி பாவாணர்  தலைமை ஒருங்கிணைப்பாளர் மரபுப்பா பயிற்சி பட்டறை ஆசான் சோலை ராஜா மிகச் சிறந்த முறையில் வழி நடத்தினார். ஒருங்கிணைப்பாளர்கள் மிக நேர்த்தியாக பணி செய்தனர்.


கல்லூரி பொறுப்பு முதல்வர் சங்கீதா அம்மா அவர்களின் பணி அளப்பரியது. அனைத்தும், மதிய உணவும் தேநீர் பாசிப்பயிறு என எல்லாமே சத்தாக முத்தாக இருந்தது. நல்லதொரு வாய்ப்பைக் கண்ணதாசனுக்காக அரசுக் கவிஞரை சிறப்பித்தப் பெருமையில் உள்ளம் பூரிக்கிறது.


நான் நிரந்தரமானவன்


சிறுகூடல்  முத்தையாவே சீரிளமை கண்ணதாசன்

சிந்தனையின் உயரத்தால்  சிகரத்தை

எட்டினானே

மறுவாழ்வு கண்டதாலே மறுமலர்ச்சி

கவிஞனாக

மலர்ந்திட்ட  கவிதைகளால் மனிதத்தை கற்பித்தான்

விறுவிறுப்பாய்  எழுதிட்ட வியப்பினிலே பாடல்கள்

விந்தையாகப் பார்த்திட்ட விடிவெள்ளி

ஆனானே

குறும்புகளும் இருந்திட்டக் குன்றுமணி

இவனாக

குன்றிலிட்ட  அகல்விளக்காய் குவலயத்தில்  கண்டோமே


வித்தகனாய் தத்துவத்தை விடியலுக்கும் தந்தானே

விண்ணுலகம் சென்றாலும் வீழாத

ஆச்சரியம்

சொத்தாக உலகமுமேச் சொந்தமாக கொண்டாடும்

சொல்லாடல் விளையாடி சோர்வையுமேச் சுவையாக்கி

நாத்திகனாய் இருந்திட்டு நடிகனாக

வலம்வந்தான்

நவரசத்தை அளந்தானே நம்மவராய்

வாழ்ந்தானே

ஆத்திகனாய் ஆனபின்பே அர்த்தமுள்ள ஆயிரமே

ஆறுமனம் என்றிட்ட ஆற்றாமை முடிவுரையும்



திறந்திட்ட புத்தகமாய் திசையெங்கும்

புகழுரையாய்

திறம்படவே எழுதிட்ட திகட்டாத வரலாறு

சிறந்ததுவே படைப்புகளும் சிற்பமாக

நின்றதுவே

சீர்திருத்த நடையினிலே சுடரொளியாய் விளங்கியதே

மறந்திட்டான் துரோகங்கள் மன்னித்தான் பகைவரையும்

மண்ணிலிவன் ஞானியாக மாசற்ற

மனிதனாக

கறந்தபாலின் வெள்ளைமனம் கள்ளமில்லா குணத்தினாலே

காலத்தை மூச்சாக்கி  காற்றினிலே

ஒலிக்கிறானே.