உணவே உயிர் என உணர்த்திய ஞானி!
Oct 25, 2026,03:28 PM IST
- தி.மீரா
சமையல் கலையை உயர்த்திய கரங்கள்
சாதனை வித்தகர் இன்று அடங்கினார்.
ஆயிரம் உணவும் அரும் புறமாய்
அருமையாய் சமைத்த சாம்ராட் அவர்;
கின்னஸ் ஏட்டிலும் பெயர் எழுதிய
கலைஞர் தாமு இன்று மறைந்தார்.
பத்மஸ்ரீ மாலை பெற்ற பெருமையும்,
பாரம்பரிய சுவையும் என்றும் நின்றும்
பாசமிகு தாமு அப்பா என்று
பலரும் அழைத்த நல்ல உள்ளம்.
உணவே உயிர் என உணர்த்திய ஞானி,
உலகிற்கு தமிழ்ச் சுவை கற்பித்த வல்லவன்;
உயிர் பிரிந்தாலும் உணவுக் கலையில்
உங்கள் நினைவு என்றும் மலரும் தாமு.
617 வகை உணவுகளை 24 மணி நேரத்திற்கும் மேலாகச் சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தவர்; 2025-இல் பத்மஸ்ரீ பெற்றவர்.