நான் வாசித்த புத்தகம்!
- தி. மீரா
புத்தகம் எந்த அளவிற்கு ஒருவரின் நேரத்தை பொன்னாகவும் நமது சிந்தனையையும் உயர்த்துகிறது என்பதை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி எண்ணற்ற புத்தகங்கள் நான் படித்து இருந்தாலும் அதில் என்னைக் கவர்ந்த ஒரு புத்தகம் இறையன்பு ஐயா எழுதிய உன்னை அறிந்தால் என்ற புத்தகம்.
இந்த புத்தகம் மிக அழகாக தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஒருவரின் மனம் எப்படி இருக்கிறதோ அதை வைத்தே உலகம் பார்க்கப்படுகிறது.தன்னை அறிந்தவன் தரணி ஆள்கிறான்.
நாம் பொதுவாக வெளியில் ஒரு நல்ல மதிப்பு மரியாதை வருவதற்காக பொய் முகங்களுடன் வலம் வருகிறோம்.ஆனால் நம்மை நாம் ஏமாற்றுவது தெரிவதில்லை.
நாளடைவில் பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகாவும் எண்ணி உலகில் வாழ்ந்து வருவது நமக்கான வாழ்க்கையை சரியாக வாழ முடியாமல் செய்கிறது.
இந்த புத்தகத்தை படித்து பிறகு மிக அழகாக நமது பலம் பலவீனம் நம்மைப் பற்றிய சரியான அறிதல் தெரிதல் புரிதல் நடைபெறுகிறது.
இந்த புத்தகத்தின் சிறப்பு மனதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.நம்மை நாம் சரியாக அறியும் பொழுது உலகத்தை மற்ற மனிதர்களை சரியாக கணிக்க முடிகிறது.
எண்ணற்ற உளவியல் கருத்துகள் உலக நடைமுறை இன்றைய திருமண வாழ்வின் தோல்விகளுக்கான காரணம் என அற்புதமாக கருத்துகளை பதிவு செய்துள்ளார். நூலை படித்தால் நம்மை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)