நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!

Su.tha Arivalagan
Oct 28, 2025,03:52 PM IST
- யோகா பேராசிரியை மு.மஞ்சரி

பிரபஞ்சம் என்ற நந்தவனத்தில் இறுதியாக பூத்த மலர்தான் மனிதன். பஞ்சபூதங்களின் கூட்டாக உருவாகிய பூமி என்ற உருண்டையில் பல கோடி நூற்றாண்டுகளின் பரிணாமமாக ஒரு செல் அமிபாவிலிருந்து ,ஓர் உயிர் தாவரம் . ஈருயிர் புழு மூன்றாவது உயிர்: பூச்சிகள். நான்காவது உயிர்: பாம்பு, பறவை. ஐந்தாவது: உயிரான யானை விலங்கினம். ஆறாவது நாம் மனிதன். 

இறைநிலை தன்னையே பார்த்துக் கொள்ள, ஆசைப்பட்டதால் இறுதியில் பரிணாம வளர்ச்சியின் முழு வடிவமே மனிதன். ஒரு மனிதன் இதமாக இருக்கின்றானா? மனிதன் மனிதனாக வாழ, மகரிஷி அவர்களால் தரப்பட்ட சங்கல்பம். அதாவது, (உறுதிமொழி) அருட்பேராற்றல் கருணையினால் ,உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்வாயாக என்று,, அருளியுள்ளார். இதைப்பற்றி நான் ஆய்ந்தபோது எனக்கு, கீழ்கண்ட சங்கல்பங்கள் தோன்றின. அதை இங்கு அளித்துள்ளேன்





1.இந்த ஆரவாரங்களுக்கு நடுவே ‌என் அறிவை காப்பாற்றும்.
2. இந்த‌ வேகத்துக்கு‌‌ ‌ நடுவே எனக்கு நிதானத்தை‌ ‌‌கொடு.
3.இந்த  கூட்டத்துக்கு ‌நடுவே என்னுடைய ‌தியானத்துக்குத் தனிமை ‌கொடு.
4. நினைவின் அருவங்களாகிய கனவுகளில் இருந்து என் மனம்‌விலகி நிற்கட்டும்.
5. மெய்யொளியை‌ மறைக்கும் ‌பொய்யொளிகளை‌ என் கண்கள்‌ கானக்  கூசட்டும்.
6. வெற்றுரைகளைக் கேட்காமல்‌‌ என் செவிகள் மூடிக்‌  கொள்ளட்டும்.
7. வெற்றுரைகளை‌‌ பேசாமல் என் நா‌அடங்கட்டும்.
8. தேன் பாத்திரத்திற்குள் ‌சுவைப்பதற்கு  இறங்கும் வண்டு ‌அதுனுள்ளே‌ மூழ்கி மாண்டு போவது போல், கண்னுக்கினியனவும், செவிக்கினியனவும், நாவுக்கினியனவும், வாசனைக்கு இனியனவும் ஆகிய சுவை‌‌ வெள்ளங்களில் மூழ்கி அழிந்து விடாமல்  நீந்திக் கரையேறுகிற ஆற்றலை எனக்குக் கொடு.
9. தாயின் கருவிலிருந்து புறப்பட்டு வந்து இந்த மண்ணில் குதித்த முதல்  விநாடி தொடங்கி‌. உயிர் வாழ்க்கையே‌ ஒரு பெரிய யாத்திரை தான்.
10. ஒரு விளைவை வெற்றியாகும்,தோல்வியாகவும எடுத்துக் கொண்டு அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தையும் எமக்குக் கொடு.

இயேசு பெருமான் அளித்த 10 கட்டளைகளை போல், இந்த பத்து சங்கல்பங்களையும், தினம் ஒரு முறை மனிதன் படித்து வந்தால், அதை தன் மனதில் பதிய வைத்தால், அவனிடம் குடிகொண்டிருக்கும் பல பாவ பதிவுகளைச் செய்ய வைக்கும் அந்த ஆறு குணங்களை நாம் காணலாம். 

அவை ஒன்று பேராசை, இரண்டு சினம், மூன்று கடும் பற்று, நான்கு உயர்வு தாழ்வு மனப்பான்மை, ஐந்து முறையற்ற பால் கவர்ச்சி ,ஆறு வஞ்சம் இவை ஆகும் .ஒரு முறை யோசித்துப் பாருங்கள் .இது தேவையா? இவைகளைக் கலைய ஒரு முறையாவது இந்த சங்கல்பங்களை கடைப்பிடித்து வந்தால், பேராசை- நிறைமணமாகும் .சினம்- பொறுமையாக பரிமளிக்கும். கடும் பற்று- ஈகை என்ற கொடைத்தன்மை வரும். உயர்வு தாழ்வு மனப்பான்மை- சமநோக்கு என்ற சமதர்மக் கொள்கை வரும். முறையற்ற பால் கவர்ச்சி- கற்பு என்ற மாநெறி உருவாகும். கற்பை, இருபாலருக்கும் பொதுவாக வைக்கப்படும். வஞ்சம்- மன்னித்தல், என்ற நெறி மனதுக்கு ஏற்படும். 

இந்த ஆறு தீய குணங்களும் இதுபோன்று நற்குணங்களாக, மாறிவிட்டால் பஞ்சமா பாதகங்களான பொய், களவு, கொலை, சூது, பொறாமை என்ற ஐந்தும் மனிதனிடம் எழாமல் மறைந்தே போய்விடும். இதற்காகவாவது இந்த சங்கல்பங்களை படிப்பதை தினம் ஒரு கடமையாக்கி கொண்டால், மனிதன், நான் ஏன் பிறந்தேன்? என்ன செய்ய வேண்டும் ?எனது முடிவு தான் என்ன? இறைநிலையை அடைவது எப்படி? என்பது எல்லாம் விளங்கும். மனிதன் தன் ஐந்தாவது அறிவு நிலையில் இருந்து விடுபட்டு ஆறாவது அறிவு நிலையை முழுமையாக அடைவான். என்பது என் நம்பிக்கை.

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். இது அப்துல் கலாம் பொன்மொழி. வாழ்க வையகம். வாழ்க வையகம் வாழ்கவளமுடன்  வளர்க இச் சமுதாயம்.