திறமை!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
நான் இல்லாமல் நீ இல்லை
உன்னுள் என்னை
புதைத்து வைத்துள்ளாய்.....
என்னை அறிந்து வெளிக்கொணர்ந்தால்
உந்தன் நிலை சிகரம் தான்.....
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமாய் இருக்கின்றேன்...
பிறர் என்னை பயன்படுத்துவதை
ஏங்கிப் பார்க்கிறாய்......
நீயே உன்னை தாழ்த்திக் கொள்கிறாய்.....
தாழம்பூவாய் நீயும் மணக்க
என்னை உழைப்பில் சூடிடு....
உலகின் பார்வையை
உந்தன் பக்கம் ஈர்த்திடு......
உன்னால் இயன்ற நன்மையை
உலகிற்கு ஈந்து மகிழ்ந்திடு....
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறேன்.....
என்னை கண்டு பிடித்திடு
உன்னால் முடியும் என்று
சாதனை பல புரிந்திடு
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)