என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

Su.tha Arivalagan
Dec 15, 2025,10:48 AM IST

- இரா. மும்தாஜ் பேகம்


மூச்சை இழுத்து விடும் போது அதிகம் சக்தியை விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி, உலகத்திலேயே, தமிழ் மொழி மட்டுமே இதனால் தமிழ் பேசினால் நூறாண்டுகள் வாழலாம் என்றனர் சித்தர்கள். 


நம் உடம்பில் ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது. இந்த 21 ஆயிரத்து 600 மூச்சுகளில் குறிப்பாக தமிழில் 216 உயிர்மை எழுத்துக்களும் உருவாக்கப்பட்டன.


ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முறை மூச்சு விடுகிறோம். அதில் உட்கார்ந்து இருக்கும்போது 12 மூச்சும் நடக்கும்போது 18 மூச்சும், ஓடும் போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், படபடப்பு, கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போது 64 மூச்சும் ஆக ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன. 


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் ஓடச் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகள் ஆகும் என சித்தர்கள் கூறியுள்ளனர். இந்த மூச்சு அளவு அதிகரித்தால் அதற்கு தகுந்தார் போல் ஆயுளும் குறைகிறது. இந்த வகையில் தமிழ் நமக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருகின்றது.




முள் குத்தினால் அ ....ஆ 

நண்பனை கண்டால் இ.. ...ஈ

வலியால் வருவது ஊ.. ஊ

வாட்டம் தருவது எ.. ஏ 

மகிழ்ச்சி வந்தால் ஐ... ஐ 

வியந்து பார்த்தால் ஒ....ஓ


தமிழுக்கு தனி ஒரு சிறப்புண்டு தனித்தனி எழுத்திற்கும் பொருள் உண்டு. 


(உ.ம்)

ஆ -என்றால் பசு

வா-அழை

தா-கொடு

கோ-அரசன்

போ-செல்

கை -உடல் உறுப்பு

தை -மாதம்.


மேற்கத்திய நாட்டவர்கள் வாய் திறந்து பேசினால் பனிக்காற்று அவர்கள் வாய் வழியாக உள்ளே சென்று நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயை உண்டாக்கும். அதனால் உதடுகள் குவிந்த நிலையில் பேசுகின்றனர். ஆனால், நாம் தமிழ் மொழியை வாய் திறந்து பேசும்போது அதிகமான ஆக்சிஜன் வாய் வழியாக உள்ளே செல்கிறது. ஆகவே இந்த அதிகமான ஆக்சிஜன் ஆயுளை நீட்டித்து தருகிறது. இதுவும் தமிழ் மொழிக்கான ஒரு சிறப்பு.


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)