சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்?

Su.tha Arivalagan
Aug 31, 2026,11:00 AM IST

சென்னை: இரண்டு நாட்கள் வார இறுதி விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றக் பேரவைக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 31, 2026) காலையில் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த அமர்வில் மாநிலத்தின் பல்வேறு முக்கிய அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.


இன்றைய விவாதப் பொருட்கள் மற்றும் முக்கிய துறைகள்:


சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள முக்கிய மானியக் கோரிக்கை விவாதங்களில் பல துறை சார்ந்த கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அவை:


- முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, 

- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை.

- வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை.

- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.


கேள்வி நேரமும் விவாதமும்:




சட்டமன்ற நடவடிக்கைகள் வழக்கம் போல் கேள்வி நேரத்துடன் தொடங்கின. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மேலே குறிப்பிடப்பட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விரிவான விவாதம் நடைபெறும்.


ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட முக்கியக் கோரிக்கைகள் மற்றும் துறை சார்ந்த ஆலோசனைகளை முன் வைப்பார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் விளக்கமளித்து, புதிய திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய திட்டங்கள் எதிர்பார்ப்பு:


குறிப்பாக, மகளிர் உரிமைத் துறை மற்றும் உழவர் நலத் துறை ஆகியவற்றின் மீது விவாதம் நடைபெறவுள்ளதால், பெண்கள் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கான கூடுதல் நிதியொதுக்கீடு மற்றும் புதிய நலத்திட்டங்கள் குறித்த தகவல்களும் இன்றைய கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளதால் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிற்கு முதல்வர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.