தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

Su.tha Arivalagan
Jul 18, 2026,07:05 PM IST

சென்னை: இன்று ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.


மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்ற அப்போதைய முதலமைச்சராக இருந்த மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் இயற்றிய நாள் 1967 ஜூலை 18 இந்த நாளையே தமிழ்நாடு நாளாக அரசு அறிவித்து, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.




இந்த வருடம்  மாவட்டம் தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மட்டும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன .




தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் தோறும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அதில் திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து ,ஏழாம் வகுப்பு மாணவிகள்  வசுமிதா மற்றும்  பிரணிதா இருவரும் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டனர்.