தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் இலவச ஷு க்கள், செருப்புகள் விநியோகம்!
தேவகோட்டை : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள், காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பிற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லெட்சுமி மற்றும் கருப்பையா ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஷுக்கள், காலணிகளை மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி, முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஷுக்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.