சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடி கைது
- கலைவாணி கோபால்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் நீடிக்கிறது. சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கோயம்புத்தூர், நெல்லை போன்ற அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களும் தங்களை நிரந்தர பணியில் அமர்த்தமாறு காதில் பூ வைத்து தங்கள் போராட்டத்தை நூதன முறையில் தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர் .
தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் நிரந்தர பணி அமர்த்தமாறு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர் தங்களது சங்கம் மூலம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கருத்து தெரிவிக்கையில், செவிலியர்கள் பணிக்கு அமர்த்தும் போதே நிரந்தர பணி செய்ய மாட்டாது. என்ற விதிமுறை கொண்ட அவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆடர் தரப்படுகிறது . இது தெரிந்திருந்தும், போராட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள் என்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
அதற்கு பதில் சொல்லும் விதமாக செவிலியர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அமைச்சர் சொல்வது சரிதான். ஆனால், செவிலியர்களின் அனுபவங்கள், மற்றும் அவர்கள் பணி புரியும் சிறப்பு முறையில் அடிப்படையிலும் நிரந்தர பணி அமர்த்தப்படுவார் என்ற குறிப்பு நியமன ஆணையில் இருப்பதாகவும், அதைத்தான் தாங்கள் வலியுறுத்துவதாகவும் செவிலியர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது
தங்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வந்தும் கூட, அதை நிராகரித்துவிட்டு, நாம் பிறந்த மண்ணிற்காக இங்கேயே தங்கி வேலை செய்கிற எங்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் கண்ணீர் வழிய வேனில் ஏறிச் சென்றனர்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)