தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 18, 2026,01:47 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டேன். 




ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான Sahitya Akademi விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்!


திராவிடத்துக்கே உரிய முற்போக்கு விமர்சனப் பார்வையை முன்னிறுத்திப் பேசியதோடு, வாசிப்பினைக் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுக்கும் நமது Dravidian Model அரசின் முயற்சிகளையும் பாராட்டிய International Booker Prize வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் அவர்களுக்கு எனது நன்றிகள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.