ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

Meenakshi
Jan 23, 2026,03:41 PM IST
சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் பா.ம.க, அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.





செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7 அடுக்கு பாதுகாப்புடன், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு என்டிஏ-வுடன் இருக்கிறது. இன்று பிற்பகல் மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் என்டிஏ தலைவர்களுடன் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் நிறைந்த திமுக ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு மக்கள் முடிவு செய்துவிட்டனர். என்டிஏ-வின் நல்லாட்சி சாதனைப் பதிவும், பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அது அளிக்கும் முக்கியத்துவமும் மாநில மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.