இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Meenakshi
Feb 17, 2026,06:09 PM IST

சென்னை: இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று   அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து எதிர் கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 




இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு அவர்கள்!


ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!


ஜூலை மாதம்திராவிட மாடலின் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்! என்று தெரிவித்துள்ளார்.


நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…