Welcome to Chithirai: வசந்தங்கள் தொடரட்டும் சித்திரை பெண்ணே!

Su.tha Arivalagan
Apr 14, 2026,11:47 AM IST

- சிவ. ஆ மலர்விழி ராஜா


சித்திரையே


நீ...... 


சிங்காரமாய்

வருக.... ! 


மலரும் நினைவுகளில்.... 


மல்லிகை தளிரெனவே

 துளிர் பெற்று வருக.......! 




வாழ்வின் நிலை 

உயர்த்தி..... 


வசந்தங்கள் போற்றிடவே வரம் தரவே வருக..... ! 


காலங்கள் கனிந்திடவே 


கருணை  மனங்கொண்டு கனியமுதாய்  வருக..... ! 


காலமகள் கண்விழித்து

கடமைகளை போற்றிடவே.... 


பராபவ வருடமென

சீர் பெறவே வருக..... ! 


உறவுகள்  செழித்திடவே... 


உணர்வுகள் மகிழ்ச்சி

பெற 


உவகையுடன் வருக..... ! 


ஆரோக்கியம் நிலைத்திடவே


ஆனந்தம் பெருகிடவே.... 


ஆண்டவனின் அருள் பெற்று அகிலம் மகிழ வருக......! 


வெறுப்பு பொய்மை போக்கிடவே... 


மகிழ்ச்சி வெள்ளம்

பெருகிடவே


இசைந்து நீயும் வருக.....! 


இயற்கையை  ரசித்திடவே...


இனிமையும்

சேர்ந்திடவே.... 


புவனங்கள்  போற்றிடவே...... 

புது கவிதைகள்

பிறந்திடவே......... ! 


சித்திரை பெண்ணே

 நீ... 


சிரித்து மகிழ்ந்திடவே

செந்தமிழாய் வருக,..... 

 

சமாதானம் நிலைத்திருக்க...... 


சச்சரவு சரிந்து விழ

சங்கீதமாய் வருக....

உலக சமாதானம் தருக.....! 

உலக சமாதானம் தருக.... !! 


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)