ஓமன் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு.. மஸ்கட்டில் தமிழ்நாடு நாள்.. விதம் விதமான போட்டிகள்

Su.tha Arivalagan
Oct 04, 2025,11:41 AM IST

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு வகையான தனித் திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.


மஸ்கட்டில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.


மழலையர் மாறு வேடப் போட்டி, செய்யுள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல், குறுங்காணொளிகள் (மகளிர்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.


இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக  96894026822 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.




போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம்: ஒருவருக்கு - 5 ரியால். அதுவே குடும்பம் என்றால் 12 ரியால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பம் என்பது இரு குழந்தைகள் + தாயார் ஆகும். 


போட்டி நடைபெறும் இடம்: Frankincense Hotel, Al Khuwair- Muscat


பரிசளிப்பு விழாவானது நவம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.