திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! என்றும்,
முதல் மாந்தன் பிறந்ததற்கு சாத்தியக்கூறு தமிழ்நாட்டில் இருக்கிறது!!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் குடி !..
”கீழடி கூறும் தமிழின் தொன்மை – அதை அழிக்க முயலும் பாஜக அரசின் திட்டம் தோல்வியடையட்டும்!..”
கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழர் உரிமையை காத்திட குரல்கொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…
கீழடி தமிழர் தாய்மடி !!...என்றும் தெரிவித்துள்ளார்.