தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

Su.tha Arivalagan
Dec 19, 2025,05:14 PM IST

சென்னை : தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியான விபரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் வெளியிட்டனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர் விபரம் :




கோவை - 6.5 லட்சம் 

திண்டுக்கல் - 3.25 லட்சம்

நெல்லை - 2.16 லட்சம்

மதுரை - 3.80 லட்சம்

திருவள்ளூர் - 6.19 லட்சம்

விழுப்புரம் - 1.82 லட்சம்

தென்காசி - 1.51 லட்சம்

கடலூர் - 2.46 லட்சம்

தஞ்சாவூர் - 2.06 லட்சம்

நாமக்கல் - 1.93 லட்சம்

திருச்சி - 3.31 லட்சம்

சேலம் - 3.62 லட்சம்

காஞ்சிபுரம் - 2.74 லட்சம்

திருப்பூர் - 5.63 லட்சம்

புதுக்கோட்டை - 1.39 லட்சம்

அரியலூர் - 24,368 

நாகை - 57,338

வேலூர் - 2.15 லட்சம்

ராணிப்பேட்டை - 1.45 லட்சம்

தூத்துக்குடி - 1.62 லட்சம்

கன்னியாக்குமரி - 1.53 லட்சம்

ஈரோடு - 3.25 லட்சம்

கள்ளக்குறிச்சி - 84,329

திருவண்ணாமலை - 2.52 லட்சம்

தேனி - 1.25 லட்சம்

செங்கல்பட்டு - 7 லட்சம்

கிருஷ்ணகிரி - 1.74 லட்சம்

கரூர் - 79,690