தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
சென்னை : தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி மற்றும் சமூக வளர்ச்சிக்கு அரிய தொண்டாற்றிய அறிஞர்களுக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது (ஜனவரி 13, 2026) தமிழக அரசு 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
திருவள்ளு தின விருது பெறுபவர்கள் :
2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது: முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
2025ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது: அமைச்சர் துரைமுருகன்
2025ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது: வழக்கறிஞர் அருள்மொழி
2025ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது: விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன்
2025ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது: எஸ்.எம்.இதயத்துல்லா
தமிழ்த்தொண்டு புரிவோருக்கான மகாகவி பாரதியார் விருது: கவிஞர் நெல்லை ஜெயந்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது: கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது: வெ.இறையன்பு
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் செல்லப்பாவு
2025ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது: விடுதலை விரும்பி
இந்த விருதுகள் அனைத்தும் வரும் ஜனவரி 16, 2026 அன்று திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி சிறப்பிக்கப்படும். 1986-ஆம் ஆண்டு முதல் திருக்குறள் நெறியைப் பரப்புபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.