தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வட தமிழ்நாடு மற்றும் உள்புறப்பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இன்றைய தமிழ்நாட்டின் மழை, வெயில் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
நேற்றைய வானிலை ஆய்வு மையத்தின் நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதன்படி, நேற்று வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.மேலும்
கரூரில் 40.0,
திருச்சி 39.7,
மதுரை விமான நிலையம் 39.5,
திருத்தணி 39.2,
சேலம் 39.0,
தர்மபுரி 39.0,
மதுரை நகரம் 38.6,
சென்னை விமான நிலையம் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இன்று வெப்பநிலை:
இன்று கரூர் மற்றும் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் வேலூரை விட அதிகமாக இருக்கும். திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், திருத்தணி போன்ற பிற பகுதிகள் 39 டிகிரி செல்சியஸ் விட சற்று கூடுதலாகவும், அல்லது -1 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் இருக்கும்.
இன்று மழை:
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை போன்ற தென் தமிழக மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கேரளாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை வெயில்:
சென்னை விமான நிலையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் உட்புற பகுதியில் 37.5 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.