ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
- கலைவாணி ராமு , புதுச்சேரி
கல்வி கண் திறந்த நம் ஆசானான கடவுளின் தினம் ...ஆம்
ஆசிரியர் தினம்....
அன்பின் மறு உருவம் ஆசிரியர்
அறிவின் ஊற்றை வழங்கும் வள்ளலே....
அழியாத செல்வத்திற்கு வழிகாட்டும் ஆசானே....
எங்களின் திறமையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியே.....
எதிர்கால சந்ததியை செதுக்கும் சிற்பியே...
சுயநலம் பார்க்காமல் பொதுநல சிற்பிகள் தான் நம் ஆசிரியர்....
உளிகொண்டு செதுக்காமல் மொழி கொண்டு செதுக்கும் சிற்பிகள் தான் ஆசிரியர்...
கருவறை என்றால் அம்மா.... கல்வி அறை என்றால் ஆசிரியர்....
அன்பை செலுத்துவதில் மற்றும் ஒரு தாயாக...
கண்டிப்பை காட்டுவதில் தந்தையாக....
மனம் விட்டு பேசுவதில் உற்ற தோழனாக....
ஒழுக்கம் புகட்டுவதில் கடவுளாக....
எனக்காக என்னோடு ஓடும் கால சக்கரமாக....
அவர் பெயர் மறைத்து என் பெயரை முன் நிறுத்தும் ஞானியாக....
பறக்கும் பட்டமல்ல அவர்கள்...
பட்டமாக நம்மை பறக்க வைக்க உதவும் நூலாக நம்மை உயர்த்தி பார்க்கும் ஆசான் நம் ஆசிரியர்....
ஆசிரியர் கையில் கம்பு இருந்தால்
காவலர் கையில் இருக்கும் கம்புக்கு வேலை இருக்காது.....
தன்னை உருக்கி வெளிச்சம் தரும் மெழகாய் வளம் வருபவர் நம் ஆசான்
அகள் விளக்காய் ஒளிரச் செய்பவர் தான் நம் ஆசான்...
விட்டால் போதும் என்று சிட்டாய் பறக்கும் எனக்கு
கட்டாய கல்வியை உரைத்த என் ஆசானின் பதம் பணிந்து
என்னுள் வாழும் என் ஆசானை வணங்கி முடிக்கின்றேன் கவிதையை!