ஆசிரியர்!

Su.tha Arivalagan
Jan 23, 2026,03:03 PM IST

- கபிசப்ரி தென்றல், தென்காசி


அன்னை போன்றவர் 

ஆணவம் இல்லாதவர் 

அடக்கத்தின் மறு உருவானவர் 

ஆடம்பரம் இல்லாதவர் 

அக்கறை கொண்டவர் 


பொறுமை உடையவர் 

பொறாமை இல்லாதவர் 




கண்கள் போன்றவர் 

கண்கண்ட தெய்வமானவர்


பெற்றெடுக்காத பிள்ளைகளை 

சுமப்பவர்


பிள்ளையின் உச்சம் 

கண்டு மனமகிழ்பவர் 


இருட்டறையின் 

இருள் விலக்கி 

உலகிற்கே ஆதவனாக

பிரகாசிப்பவர்...


பிள்ளைகளின்

ஆணிவேர் போன்றவர்...


உளி துளைக்காத 

பாறையில் துளிர்க்கும் 

தளிரை உருவாக்குபவர்....


தோளோடு தோள் 

கொடுக்கும் தோழமையானவர்.....


எதிர்கால சிற்பங்களை 

செம்மையாகச் செதுக்கும் 

சிற்பியானவர்....


மழலைகளின் மனமகிழும்

தாயானவர்....


அறப்பணி என்று 

தம்பணி சிறப்பானவர்!