என்னாது... இளநீர் குடித்தால் கிட்னிக்கு ஆபத்தா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
தேங்காய் தண்ணீர் அதாவது இளநீர் உடலுக்கு நல்லது. ஆனால், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
இளநீரில் அதிக அளவில் பொட்டாசியம், சோடியம் உள்ளது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், இது சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல்நல பிரச்சனைகள் வரலாம். சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, மாதுளை ஜூஸ், கிரீன் டீ போன்ற பானங்களை குடிக்கலாம்.
அதேசமயம், இளநீரானது ஒரு சக்தி வாய்ந்த பானம். இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால், இது எல்லோருக்கும் பாதுகாப்பான பானம் அல்ல.
இளநீர் ஏன் சிறுநீரக நோயாளிகளுக்கு ஆபத்து என்பது குறித்து மருத்துவர்கள் விளக்குகின்றனர். அவர்கள் கூறுகையில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதுதான் முக்கிய கவலை. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை வடிகட்டுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, இந்த செயல்பாடு பாதிக்கப்படுவதால், ஹைபர்கலேமியா ஏற்படும் அபாயம் உள்ளது.
லேசான ஹைபர்கலேமியா இருந்தால் அறிகுறிகள் தெரியாது. ஆனால், தீவிரமானால் இதயத்தில் பிரச்சினை, தசை பலவீனம், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
இளநீரில் சோடியம் அதிகம் உள்ளது. சோடியம் என்றால் உப்பு. இது உடலில் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. நரம்பு மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது. ஆனால், அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உடலில் நீரை தக்கவைக்கும். இது சிறுநீரகங்களுக்கு அதிக சிரமத்தை கொடுக்கும். நோயை மோசமாக்கும். இது சிறுநீரகங்களுக்கு மேலும் சிரமத்தை கொடுத்து நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இளநீர் குடிப்பது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். அதாவது வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஏனெனில், இதில் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது.
சரி சிறுநீரக ஆரோக்கியத்திற்கு என்ன குடிக்கலாம்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் குடிப்பது முக்கியம். மேலும் சில இயற்கை பானங்களும் நன்மை தரும். அவை:
- மாதுளை ஜூஸ்
- கிரீன் டீ
- பாதாம் அல்லது ஓட்ஸ் பால்
- கிரான்பெர்ரி ஜூஸ்
- எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர்
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி பானங்களை குடிப்பது சிறந்தது.