திருவண்ணாமலையில் நடந்த ஒற்றுமை யாத்திரையில்.. தடம் பதித்த செ.திவ்யஸ்ரீ
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாள், ஒற்றுமை யாத்திரையில் தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பின் தலைவரான செ. திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலையிலும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் மேரா யுவ பாரத் திருவண்ணாமலை சார்பிலும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமை வகித்து முதன்மை உரையாற்றினார். திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை, முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மேரா யுவ பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அதிகாரி நம்மல கிருஷ்ணா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் இளைஞர் அமைப்பின் தலைவர் செ. திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.