தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!

Su.tha Arivalagan
Jan 15, 2026,12:27 PM IST

- க.முருகேஸ்வரி


தைத்திங்கள் 

முதல் நாள்

தரணி போற்றும் திருநாள்

தை மகளை வரவேற்க

மாக்கோலம் தான் போட்டு

மாவிலைத் தோரணம் கட்டி

பச்சரிசி வெல்லம் சேர்த்து

பக்குவமாய் பொங்கலிட்டு




கரும்போடு காய் கனிகளும் படைத்து

கதிரவனை வரவேற்று

வணக்கம் செலுத்தி

உற்றார் உறவினரோடு

பொங்கலோ பொங்கல் என

குலவையிட்டு

தை மகளை வரவேற்போம்

அறுவடைத் திருநாளை

ஆனந்தமாய் 

 கொண்டாடி மகிழ்வோம்

அனைவருக்கும் இனிய 

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)