உள்ளமெல்லாம் நீயாய்.. உயிர் நிறையும் முருகா!

Su.tha Arivalagan
Feb 01, 2026,10:33 AM IST

- வே.ஜெயந்தி


அழகையும் அன்பும்

அருளும் முருகா,


ஆனந்தமாய் வாழ

வழி காட்டும் முருகா.


இனிய குணம் தந்து

ஈகை மனம் தந்து,


உள்ளமெல்லாம் நீயாய்

உயிர் நிறையும் முருகா.


ஊக்கம் தந்து எங்களை

என்றென்றும் வாழ வைப்பாய்,




ஏக்கம் நீக்கி நெஞ்சின்

இருளெல்லாம் போக்குவாய்.


ஐயமே இல்லை 

நீயே தெய்வம் முருகா.


ஒய்யாரமாய் நிற்க

ஒளி தந்து காப்பாய்.


ஓய்வு இல்லாமல் வந்து

ஒரு நிழலாய் காப்பாய்,


ஔவையார் புகழ் பாடி

உலகம் வியந்த முருகா.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)