தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
தளபதி விஜய் தலைமையிலான தவெக கட்சி வரும் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரியிலும் அதே சின்னம் கிடைத்துள்ளது. இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னம் ஒதுக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் ஆதரவு ஏற்கனவே பெரிய அளவில் இருக்கும் நிலையில், இந்தச் சின்னம் ஒதுக்கீடு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுக்குப் பெரும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒரே சின்னத்தைப் பயன்படுத்துவது, வாக்காளர்கள் மத்தியில் கட்சியின் அடையாளத்தை மிக எளிதாகக் கொண்டு சேர்க்க உதவும். குறிப்பாக, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக தனது பணிகளை இப்போதே வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது. தவெகவிற்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை போலவே புதுச்சேரி தொண்டர்கம் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துள்ளது.