98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
டெல்லி: 98 வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா உலகின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது ஆகும். இந்த உயரிய விருதை வாங்குவதே ஒவ்வொரு திரைப்பட நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த விழாவில், அனோரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த விருதுக்கான பரிந்துரைகள் முன்னதாக, ஜனவரி 22 ஆம் தேதி தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளது.