இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!
May 24, 2025,01:36 PM IST
சென்னை: இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் இந்தியன் 2. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்ற போதும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கமலஹாசன் இந்தியன் 3, கல்கி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி கடந்த 38 வருடங்களுக்கு பிறகு கமலஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகி வருகிறது.
கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதை, சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில், சிம்பு, த்ரிஷா,ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்,ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷன், மெட்ராஸ் டாக்கீஸ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தக் லைப் படத்தின் முதல் பாடல் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.